இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் விசா மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை, மையத்தின் சேவைகள் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு பயணிக்க அனுமதி வழங்கும் விசா மையம், கொழும்பு பகுதியில் உள்ள ஐ வி எஸ் தனியார் நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, இங்கு கொள்ளை சம்பவம் நடந்ததை அடுத்து, சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசா மையத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் நேர்ந்ததற்கான காரணம் குறித்து, இலங்கை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வரவிருக்கும் நாட்களில், விசா சேவைக்காக விண்ணப்பித்திருந்தவர்கள், மறு அறிவிப்பு வெளியான பின்னர், மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.