வரலாற்றில் முதல்முறையாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்

July 14, 2023

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், 76 வது சுதந்திர தின விழா பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய நிகழ்வு ஏற்படவுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிளையான ‘இந்தியா பிரிட்டன் 1928 சிந்தனை அமைப்பு’, இதுகுறித்து, “இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் முயற்சியாக இந்த கொண்டாட்டம் இருக்கும்” என கூறியுள்ளது. மேலும், இனிமேல், ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினம் பிரிட்டனில் கொண்டாடப்படும் […]

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், 76 வது சுதந்திர தின விழா பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய நிகழ்வு ஏற்படவுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிளையான ‘இந்தியா பிரிட்டன் 1928 சிந்தனை அமைப்பு’, இதுகுறித்து, “இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் முயற்சியாக இந்த கொண்டாட்டம் இருக்கும்” என கூறியுள்ளது. மேலும், இனிமேல், ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினம் பிரிட்டனில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இரு தரப்பு வர்த்தக உறவு மற்றும் கலாச்சார பிணைப்பு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று பிரிட்டனின் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, “பிரிட்டனை பொறுத்தவரை இந்திய வம்சாவளியினர் முன்மாதிரி சமூகமாக இருக்கின்றனர். அவர்களின் வெற்றி இரு நாடுகளுக்குமான பெருமை” எனக் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu