இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்வு

May 29, 2023

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், ஒரே நாளில் 344.69 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக நேர முடிவில் 62846.38 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 99.3 புள்ளிகள் உயர்ந்து, 18598.65 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, மஹிந்திரா நிறுவனம் 3% உயர்வை பதிவு செய்துள்ளது. […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், ஒரே நாளில் 344.69 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக நேர முடிவில் 62846.38 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 99.3 புள்ளிகள் உயர்ந்து, 18598.65 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, மஹிந்திரா நிறுவனம் 3% உயர்வை பதிவு செய்துள்ளது. அது தவிர, எஸ்பிஐ லைஃப், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், டைட்டன், கோல் இந்தியா லிமிடெட், ஹிந்தால்கோ ஆகியவை ஏற்றம் கண்டுள்ளன. அதே வேளையில், ஓஎன்ஜிசி 3% சரிவை சந்தித்துள்ளது. அத்துடன், பவர் கிரிட், ஹெச் சி எல் டெக், மாருதி சுசுகி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu