இந்திய ராணுவத்துக்கு 800 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் - அசோக் லேலண்ட் உடன் ஒப்பந்தம்

இந்திய ராணுவத்துக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஆண்டுக்குள் அல்லது 12 மாதங்களுக்குள், வாகனங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், கனரக வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. எனவே, இந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. எப் ஏ டி (Field Artillery Tractor), ஜி டி […]

இந்திய ராணுவத்துக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஆண்டுக்குள் அல்லது 12 மாதங்களுக்குள், வாகனங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், கனரக வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. எனவே, இந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. எப் ஏ டி (Field Artillery Tractor), ஜி டி வி (Gun towing Vehicle) உள்ளிட்ட வாகனங்களை அசோக் லேலண்ட் தயாரித்து இந்திய ராணுவத்திடம் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu