சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நபர் போட்டி

July 31, 2023

வரும் செப்டம்பர் மாதத்தில், சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முக ரத்னம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக, அமைச்சரவையில் இருந்து கடந்த மாதம் விலகியுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக, அமைச்சரவையில் இருந்து விலகி உள்ள சண்முக ரத்னம், கடந்த […]

வரும் செப்டம்பர் மாதத்தில், சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முக ரத்னம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக, அமைச்சரவையில் இருந்து கடந்த மாதம் விலகியுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக, அமைச்சரவையில் இருந்து விலகி உள்ள சண்முக ரத்னம், கடந்த 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூர் எம் பி ஆக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், 2011 முதல் 2019 வரை கல்வி மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றினார். அத்துடன், துணை பிரதமராகவும் பொறுப்பு வகித்தார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர், சிங்கப்பூரில் குடியேறியவர்கள் ஆவர். எனவே, அவர் பிறந்து வளர்ந்தது அனைத்துமே சிங்கப்பூரில் தான். கடந்த 1988 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக பணியை தொடங்கிய அவர், துணை பிரதமர் வரை முன்னேறினார். தற்போது, அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu