சர்வதேச அளவில் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் பொறுப்பேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது தலைமை பதவி குறித்த அறிவிப்பு வெளிவந்தது. தற்போது, மார்ச் 20ஆம் தேதி, இவர் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 24ஆம் தேதி, இவரது தலைமையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மன் நரசிம்மன், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் வளர்ந்தவர் ஆவார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல பட்டப் படிப்புகளை பயின்ற இவர், 19 ஆண்டுகள் மெக்கின்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இது தவிர, பெப்சிகோ நிறுவனத்தில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளையும் இவர் வகுத்துள்ளார். எனவே, இவரது தலைமையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய வளர்ச்சிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.