அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மேஷ் பட்டேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர், வேண்டுமென்றே குடும்பத்தினருடன் பயணித்து வந்த காரை, மலையில் இருந்து உருண்டு விழச் செய்துள்ளார். காரில் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையில் இருந்து கீழே விழுந்ததில் கார் முழுவதுமாக உருகுலைந்தது. ஆனால், நல்வாய்ப்பாக, காருக்குள் இருந்த 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த பட்டேல் மற்றும் அவரது மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பின்னர், கொலை முயற்சி, சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ், பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மலையில் இருந்து கீழே விழுந்தாலும், பயணிகளின் உயிரை பாதுகாத்த டெஸ்லா நிறுவனத்தின் காருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.