ஸ்பெல்லிங் பீ போட்டியை வென்ற இந்தியச் சிறுவன்

May 31, 2024

அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும், தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் புருகத் சோமா வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியின் இறுதி கட்டத்தில், 90 விநாடிகளில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். நிகழாண்டில் 1.1 கோடி பேர் பங்கேற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில், இறுதிச்சுற்றுக்கு 8 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் […]

அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும், தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் புருகத் சோமா வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியின் இறுதி கட்டத்தில், 90 விநாடிகளில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நிகழாண்டில் 1.1 கோடி பேர் பங்கேற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில், இறுதிச்சுற்றுக்கு 8 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள் என்பது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கு டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. அதில், புருகத் சோமா வெற்றி பெற்றார். அவருக்கு 50000 டாலர்கள் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu