ஐரோப்பிய யோகா போட்டி இந்திய வம்சாவளி சிறுவன் தங்கம் வென்றார்

November 27, 2023

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஐரோப்பிய யோகா விளையாட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஈஸ்வர் ஷர்மா. இவர் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் தனது தந்தை யோகா செய்வதை பார்த்து மூன்று வயதில் இருந்த யோகா பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.அதனை எடுத்து பல உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அதில் கடந்த வார இறுதியில் மல்மோவில் உள்ள ஸ்வீடிஸ் யோகா விளையாட்டு […]

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஐரோப்பிய யோகா விளையாட்டு சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஈஸ்வர் ஷர்மா. இவர் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் தனது தந்தை யோகா செய்வதை பார்த்து மூன்று வயதில் இருந்த யோகா பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.அதனை எடுத்து பல உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அதில் கடந்த வார இறுதியில் மல்மோவில் உள்ள ஸ்வீடிஸ் யோகா விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஐரோப்பிய போட்டியில் பங்கேற்றார். இதில் 2023 ஆம் ஆண்டுக்கான 12 முதல் 14 வயது க்குட்பட்டோர் பிரிவில் கோப்பை வென்றுள்ளார். இவர் இதற்கு முன்னதாக 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு யோக வகுப்புகளை நடத்தி வந்தார். பிரிட்டிஷ் பிரதமர் இவருக்கு பாய்ண்ட்ஸ் ஆப் லைட் விருது வழங்கி கௌரவித்தார். மேலும் ஹவுஸ் ஆஃப் லர்ட்ஸில் 5 உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் சிட்டிசன் யூத் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu