இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஆஸ்திரேலிய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வராக கிறிஸ் மின்ஸ் பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் ஆறு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் டேனியல் மூகே, வருவாய் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமைச்சராக இதுவரை பதவி வகித்தது இல்லை. பிறப்பால் ஹிந்துவான டேனியல் மூகே, பதவி ஏற்பின் போது பகவத் கீதையின் மேல் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.