டென்மார்க் நாட்டில் நடைபெறும் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.
டென்மார்கில் நடைபெறும் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடியும், மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியும் மோதின. இந்த போட்டியில், இந்திய ஜோடி முதலில் 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், அதன் பிறகு 17-21 மற்றும் 15-21 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்தது. இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி மற்றும் சிக்கி ரெட்டி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதினர். இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினர்.