அமெரிக்கா நோக்கி இந்திய பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

August 26, 2025

அமெரிக்கா 50% வரி விதிப்பதால் இந்தியாவிலிருந்து அனுப்பும் பார்சல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பதால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நோக்கி அனுப்பும் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 29-ந்தேதி முதல் ரூ.100க்கு மேற்பட்ட இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படவுள்ளது. இதனால் இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலர்களின் அறிவிப்பில், அமெரிக்காவுக்கு மட்டும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுக்கு […]

அமெரிக்கா 50% வரி விதிப்பதால் இந்தியாவிலிருந்து அனுப்பும் பார்சல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பதால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நோக்கி அனுப்பும் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 29-ந்தேதி முதல் ரூ.100க்கு மேற்பட்ட இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படவுள்ளது. இதனால் இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலர்களின் அறிவிப்பில், அமெரிக்காவுக்கு மட்டும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுக்கு வழக்கம் போல் தொடரும் என தெரிவித்துள்ளனர். இந்திய குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கு மளிகை, துணி, தின்பண்டங்கள் அனுப்ப முடியாமல் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். 20 கிலோ பார்சல் அனுப்ப வேண்டுமானால் ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu