இந்திய பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், இன்றைய வர்த்தக நேர முடிவில், 310.88 புள்ளிகள் சரிந்து, 62917.63 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 18688.1 புள்ளிகளாக உள்ளது. இது, முந்தைய வர்த்தக நாளை விட 67.8 புள்ளிகள் குறைவாகும்.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மருந்து துறை நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அப்பல்லோ ஹாஸ்பிடல், டேவிஸ் லேப், டாக்டர் ரெட்டிஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 4% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ், நெஸ்லே, பி பி சி எல் ஆகிய நிறுவனங்களும் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், வங்கித் துறை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. விப்ரோ, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், கோட்டக் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிவு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.