ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கிவிட்டது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. இதனால் இந்தியா தரப்பில் சீனாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மத்திய விளையாட்டு துறை மந்திரி பங்கேற்கவிருந்த நிலையில் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.