டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ்ஸ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஸஸ்வி ஜெயசுவால், ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் அடைந்து டாப் 10 இல் 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர்














