ஆகஸ்ட் மாத இறுதியில், இந்தியன் ரயில்வேயின் வருவாய் 38% உயர்வு

September 12, 2022

இந்தியன் ரயில்வேயின் வருடாந்திர வருவாய் 38% உயர்ந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்தியன் ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 26271.29 கோடி ரூபாய் அதிகரித்து, இந்த வருட ஆகஸ்ட் மாத இறுதியில், 95486.58 கோடி ரூபாயாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கடந்த 2021-22 நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் 191278.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் ரயில்வேயின் அதிகாரப் பூர்வ அறிக்கையின் படி, பயணிகள் ரயில்களின் மூலம் கிடைத்த வருவாய் […]

இந்தியன் ரயில்வேயின் வருடாந்திர வருவாய் 38% உயர்ந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்தியன் ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 26271.29 கோடி ரூபாய் அதிகரித்து, இந்த வருட ஆகஸ்ட் மாத இறுதியில், 95486.58 கோடி ரூபாயாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கடந்த 2021-22 நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் 191278.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியன் ரயில்வேயின் அதிகாரப் பூர்வ அறிக்கையின் படி, பயணிகள் ரயில்களின் மூலம் கிடைத்த வருவாய் 25276.54 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த வருடத்தை விட 116% கூடுதலாகும். அத்துடன், ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமான முறையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்டு பிரிவு மற்றும் அன் ரிசர்வ்டு பிரிவு ஆகிய இரண்டிலுமே பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நகர்ப்புற ரயில்களுடன் ஒப்பிடுகையில், நீண்ட தூர ரயில் பயணங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ரயில்களில் உள்ள பிற கோச்சுகள் மூலம் கிடைத்த வருவாய் 2437.42 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 50% உயர்வாகும். முக்கியமாக, பார்சல் சேவைகளின் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சரக்கு ரயில்கள் மூலமான வருவாய், 10780.03 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடக்கையில் இது 20% உயர்வாகும். சரக்கு ரயில்களின் கொள்ளளவை 58 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக உயர்த்தியதன் விளைவாக இந்த வருவாய் கிடைத்துள்ளது. மேலும், நிகர டன் கிலோமீட்டர் அளவில் 18% உயர்வு பதிவாகியுள்ளது. நிலக்கரியைத் தவிர்த்து, உணவு தானியங்கள், உரங்கள், சிமெண்டுகள் போன்றவை சரக்கு ரயில்களில் அதிகம் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தியன் ரயில்வேயின் இதர பல தரப்பட்ட வருவாய் 2267.60 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 95% கூடுதல் வருவாயாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu