2024 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஃபோர்ப்ஸ் இதழ் இந்தியாவின் பணக்கார பட்டியலை வெளியிட்டது. அதில் 2024 ஆம் ஆண்டில் இந்திய பணக்காரர்களில் அம்பானி முதலிடத்தை உள்ளார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆவார். மேலும் இவர் 27.5 பில்லியன் டாலர்கள் கூடுதல் சொத்துகளை சேர்த்து, தற்போது 119.5 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளார். அடுத்த இடத்தில் கௌதம் அதானி 116 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதானி, கடந்த ஆண்டில் 48 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார், இது அம்பானியின் சொத்து சேர்க்கையை மிஞ்சுகிறது. இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 1 டிரில்லியன் டாலரை தாண்டி 40% உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டில் 799 பில்லியன் டாலராக இருந்தது.