இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு போக்கு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஏற்றம் பதிவானாலும், இறுதியில் 0.6% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சென்செக்ஸ் 454.69 புள்ளிகளும், நிஃப்டி 152.06 புள்ளிகளும் இழந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை 72488.99 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை 21995.85 புள்ளிகளிலும் நிலைபெற்று உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஏர்டெல், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், டைட்டன், நெஸ்லே, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, ஐடிசி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.