இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில தினங்களாக காணப்பட்டு வந்த ஏற்றப் போக்கு நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 0.8% அளவுக்கு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 609.28 புள்ளிகள் சரிந்து 73730.16 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 150.4 புள்ளிகள் சரிந்து 22419.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டெக் மஹிந்திரா, டேவிஸ் லேப்ஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், விப்ரோ, கோல் இந்தியா, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே, மஹிந்திரா, கோட்டக் வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.