தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை - புதிய உச்சங்கள் பதிவு

July 18, 2023

தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வந்த இந்திய பங்குச்சந்தை, இன்றைய தினமும் புதிய வரலாற்று உச்சங்களை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 205.21 புள்ளிகள் உயர்ந்து 66795.14 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 37.8 புள்ளிகள் உயர்ந்து 19749.25 புள்ளிகளாக நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின் இடையில், நிஃப்டி 19,800 புள்ளிகளை முதல்முறையாக கடந்தது. தனிப்பட்ட பங்குகளை […]

தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வந்த இந்திய பங்குச்சந்தை, இன்றைய தினமும் புதிய வரலாற்று உச்சங்களை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 205.21 புள்ளிகள் உயர்ந்து 66795.14 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 37.8 புள்ளிகள் உயர்ந்து 19749.25 புள்ளிகளாக நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின் இடையில், நிஃப்டி 19,800 புள்ளிகளை முதல்முறையாக கடந்தது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இன்போசிஸ் நிறுவனம் 3.7% உயர்ந்துள்ளது. நிறுவனம் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த உயர்வு பதிவாகி உள்ளது. இது தவிர, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், ஹெச் எஸ் சி எல் டெக், ஐசிஐசிஐ வங்கி, அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், எல் டி ஐ மைண்ட் ட்ரீ 2.6% சரிவடைந்துள்ளது. மேலும், ஹெச்டிஎஃப்சி லைஃப், பிரிட்டானியா, எஸ் பி ஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu