இந்திய ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் சீனத் தயாரிப்பு செல்போன்களைப் பயன்படுத்துவது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்திய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் 11 கம்பெனிகளின் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.