விண்வெளியில் பயிர்கள் எப்படி வளரும் - இஸ்ரோ ஆய்வு

December 24, 2024

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய திட்டமான பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் திட்டத்தின் மூலம் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றோடொன்று இணைக்கும் தொழில்நுட்பத்தை சோதிக்க உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முக்கியமான முன்னேற்றமாகும். மேலும், இந்த திட்டத்தின் பகுதியாக தாவரங்களை விண்வெளியில் வளர்ப்பது, விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவது போன்ற பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மும்பை அமிட்டி பல்கலைக்கழகம், விண்வெளியில் கீரை செல்களை வளர்க்கும் ஒரு தனித்துவமான சோதனையை மேற்கொள்ள உள்ளது. […]

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய திட்டமான பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் திட்டத்தின் மூலம் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றோடொன்று இணைக்கும் தொழில்நுட்பத்தை சோதிக்க உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முக்கியமான முன்னேற்றமாகும். மேலும், இந்த திட்டத்தின் பகுதியாக தாவரங்களை விண்வெளியில் வளர்ப்பது, விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவது போன்ற பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மும்பை அமிட்டி பல்கலைக்கழகம், விண்வெளியில் கீரை செல்களை வளர்க்கும் ஒரு தனித்துவமான சோதனையை மேற்கொள்ள உள்ளது. விண்வெளியில் குறைந்த ஈர்ப்பு விசையில் கீரை செல்கள் எவ்வாறு வளரும் என்பதை ஆய்வு செய்ய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனத்தை அமிட்டி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த சோதனை, விண்வெளி விவசாயம் மற்றும் பூமியில் நடைபெறும் விவசாயம் ஆகிய இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu