இந்திய பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1.6% அளவுக்கு உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1196.98 புள்ளிகள் உயர்ந்து 75418.04 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 369.86 புள்ளிகள் உயர்ந்து 22967.65 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, மஹிந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஏற்றம் பெற்றுள்ளன. சன் பார்மா, பவர் கிரிட், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, என்டிபிசி, டாடா கன்ஸ்யூமர் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே சரிவை சந்தித்துள்ளன.