ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி, உலகின் 4வது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா முன்னேற்றம்

January 23, 2024

உலகின் 4வது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, 4ம் இடத்தில் இந்தியா உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மை காலமாக, இந்தியர்கள் மத்தியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய பங்குச்சந்தை பதிவு செய்துள்ளது. […]

உலகின் 4வது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, 4ம் இடத்தில் இந்தியா உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மை காலமாக, இந்தியர்கள் மத்தியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய பங்குச்சந்தை பதிவு செய்துள்ளது. அதே வேளையில், ஹாங்காங் பங்குச்சந்தை வரலாற்று சரிவை சந்தித்துள்ளது. ஒரே காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளால், உலகின் 4வது பெரிய பங்குச்சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு 4.33 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. அதே சமயத்தில், ஹாங்காங் பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு 4.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu