ஏற்றம் கண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 899 புள்ளிகள் உயர்வு

March 4, 2023

புதன்கிழமை கடும் சரிவை பதிவு செய்த இந்தியப் பங்குச் சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், திடீர் எழுச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 899 புள்ளிகள் உயர்ந்து, 59808 ஆக பதிவானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 272 புள்ளிகள் உயர்ந்து, 17594 ஆக நிலை பெற்றது. அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியான தகவலால், அமெரிக்க பங்குச் […]

புதன்கிழமை கடும் சரிவை பதிவு செய்த இந்தியப் பங்குச் சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், திடீர் எழுச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 899 புள்ளிகள் உயர்ந்து, 59808 ஆக பதிவானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 272 புள்ளிகள் உயர்ந்து, 17594 ஆக நிலை பெற்றது. அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியான தகவலால், அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தக நாளில், அதானி குழுமம் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 16.94% வளர்ச்சியை அதானி என்டர்பிரைசஸ் பதிவு செய்துள்ளது. மேலும், அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி போர்ட்ஸ் நிறுவனம் 9.91% உயர்வைப் பதிவு செய்துள்ளது. இவை தவிர, பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்துள்ளன. அதே வேளையில், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் சரிவைப் பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu