இந்திய பங்குச் சந்தையில் தொடர் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.27 லட்சம் கோடிக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடியுக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 5 அன்று மொத்த சந்தை மூலதனம் ரூ.42,80,3611.66 கோடியாக இருந்தது. ஆனால் அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில், சந்தையில் சரிவு ஏற்பட்டு, தற்போது ரூ.40,09,9281.11 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், சென்செக்ஸ் குறியீடு சுமார் 3% சரிந்துள்ளது. இத்துடன், அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பும் இந்த சரிவின் முக்கிய காரணமாக பங்குச் சந்தையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.