இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நிறைவடைந்தது.இந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. அதில் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபன் தொடரை நான்கு முறையாக வென்ற இகா சுவியாடெக் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப், மூன்றாவது இடத்தில் பெலாரசின் உள்ளனர். பின்னர் இறுதிச்சுற்று வரை முன்னேறிய பாவ்லினி ஏழாவது இடத்திற்கு வந்துள்ளார்.
அதே போல் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்த நோவக் ஜோகோவிச் காயத்தின் காரணமாக வெளியேறியதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை சொந்தமாகிய கார்லெஸ் அல்காரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் சுமித் நாகல் 18 இடங்கள் எகிறி 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் நாகல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்