இந்தியர்களுக்கு, யூடியூபில் பன்மொழி சேவை அறிமுகம்

December 21, 2022

இந்தியா பன்மொழித் தன்மை கொண்ட நாடு என்பதை கருத்தில் கொண்டு, யூடியூப், தனது காணொலிகளை, இந்தியர்களுக்கு, பல்வேறு மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ‘கூகுள் பார் இந்தியா’ நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அம்சம் பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சத்தில், பயனர், தனது காணொலியின் ஆடியோ பதிவை எந்த மொழியில் வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இஷான் ஜான் […]

இந்தியா பன்மொழித் தன்மை கொண்ட நாடு என்பதை கருத்தில் கொண்டு, யூடியூப், தனது காணொலிகளை, இந்தியர்களுக்கு, பல்வேறு மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ‘கூகுள் பார் இந்தியா’ நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அம்சம் பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சத்தில், பயனர், தனது காணொலியின் ஆடியோ பதிவை எந்த மொழியில் வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இஷான் ஜான் சட்டர்ஜி, “வீடியோக்கள் மூலம் வெகுஜன மக்களை எளிதில் சென்றடைய முடியும். எனவே, எங்கள் தளம் மூலம், தரமான தகவல்களை கொண்டு சேர்க்க, யூடியூப் பன்மொழி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில், சுகாதார நலன் சார்ந்த காணொலிகளின் ஆடியோ பதிவுகளை ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மற்றும் மராத்தி மொழிகளில் கேட்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu