இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 16 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் வரும் மார்ச் 22 ஆம் தேதி 17வது சீசன் தொடங்க உள்ளது. மேலும் ஐபிஎல் போன்று எஸ் ஏ 20, கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் வகையில் மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரிமியர் எனப்படும் இந்த தொடர் 23ஆம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், கேர்சல் கிப்ஸ் ஆகிய முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த தொடரில் வி.வி.ஐ. பி உத்திரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட், டெல்லி சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலுங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் ஆகிய ஆறு அணிகள் இடம் பெறுகின்றன. தொடர் முழுவதும் உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசத்தில் நடத்தப்படுகிறது.














