வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

August 8, 2024

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறையின் காரணமாக, அங்கு செயல்படும் அனைத்து இந்திய விசா மையங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. விசா விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து SMS மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரது வெளியேற்றத்திற்கு பின், வங்கதேசத்தில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்து சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு அவர்களின் வீடுகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. […]

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறையின் காரணமாக, அங்கு செயல்படும் அனைத்து இந்திய விசா மையங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. விசா விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து SMS மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரது வெளியேற்றத்திற்கு பின், வங்கதேசத்தில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்து சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு அவர்களின் வீடுகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த நிலைமை காரணமாக, வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பலர் நாடு திரும்பியுள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் அத்தியாவசியமற்ற ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu