போர்ப்ஸ் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்திய பெண்கள் இடம் பிடிப்பு

December 8, 2023

போர்ப்ஸ் நாளிதழ், ஒவ்வொரு ஆண்டும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில், 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பெண்ணாக 32 ஆம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக, ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-ஆம் இடத்தில் உள்ளார். ஸ்டீல் அத்தாரிட்டி […]

போர்ப்ஸ் நாளிதழ், ஒவ்வொரு ஆண்டும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில், 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பெண்ணாக 32 ஆம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக, ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-ஆம் இடத்தில் உள்ளார். ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோமா மண்டல் போர்ப்ஸ் பட்டியலில் 70 ஆம் இடம் பிடித்துள்ளார். நான்காவது இந்தியப் பெண்ணாக, பயோகான் மருந்து நிறுவனத்தின் தோற்றுநர் கிரண் மஜூம்தார்ஷா 76 ஆம் இடத்தில் உள்ளார். நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu