ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியில் இந்தியா இலங்கை இடையேயான மகளிர் கிரிக்கெட் அணியில் இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஏழு விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து இந்திய அணி இலங்கை அணிக்கான ரன்களை நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் ரன் எடுக்காமல் திரும்பினார். அடுத்தடுத்து வந்தவர்களும் ரன்களை எடுக்காத நிலையில் இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டை தழுவியது. அதன்படி 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழப்பில் 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவிற்கு கூடுதலாக ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.