ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி ஹாங்காங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி பெண்கள் ஹாக்கி அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் விளையாடியது. இதில் தொடக்கம் முதலே இந்திய அணி கோல்களை குவித்து வந்தது. இந்த நிலையில் ஹாங்காங்கை 13-0 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற நான்கு ஆட்டத்தில் இந்தியா மூன்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நாளை அரை இறுதி சுற்றில் தென்கொரியாவுடன் மோதுகிறது.