இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி தலைமையில், கிரகணத்தின் போது ராக்கெட் ஏவும் பரிசோதனை

October 10, 2023

வரும் அக்டோபர் 14ஆம் தேதி, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதே சமயத்தில், நாசா ராக்கெட் பரிசோதனை செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி பணியாற்றி வருகிறார். ஆரோஹ் பர்ஜத்யா என்ற நாசா விஞ்ஞானி தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக தெரிவிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி, வளைய சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. […]

வரும் அக்டோபர் 14ஆம் தேதி, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதே சமயத்தில், நாசா ராக்கெட் பரிசோதனை செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி பணியாற்றி வருகிறார்.
ஆரோஹ் பர்ஜத்யா என்ற நாசா விஞ்ஞானி தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக தெரிவிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி, வளைய சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. அப்போது, பூமியின் வளிமண்டலத்தில் திடீரென சூரிய ஒளி குறையும் சூழல் உருவாகும். அத்தகைய சமயத்தில், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நாசா ஆய்வு செய்ய உள்ளது. அந்த நாளில், 3 ராக்கெட் ஏவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் ராக்கெட் கிரகணத்துக்கு 35 நிமிடங்கள் முன்னதாகவும், மூன்றாவது ராக்கெட் கிரகணத்துக்கு 35 நிமிடங்கள் பின்னரும் ஏவப்படுகின்றன. இரண்டாவது ராக்கெட் கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஏவப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu