2024 ஆம் ஆண்டுக்கான உயரிய ‘ஷா விருதை’ வென்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி

ஒவ்வொரு ஆண்டும், வாழ்வியல் மருத்துவம், கணித அறிவியல் மற்றும் வானியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஷா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஷா விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், வானியல் துறைக்கான ஷா விருதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி வென்றுள்ளார். ஸ்ரீநிவாஸ் குல்கர்னி, கடந்த 1978 ஆம் ஆண்டு ஐஐடியில் பட்ட மேற்படிப்பு முடித்தார். தொடர்ந்து, 1983 ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். அதன் […]

ஒவ்வொரு ஆண்டும், வாழ்வியல் மருத்துவம், கணித அறிவியல் மற்றும் வானியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஷா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஷா விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், வானியல் துறைக்கான ஷா விருதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி வென்றுள்ளார்.

ஸ்ரீநிவாஸ் குல்கர்னி, கடந்த 1978 ஆம் ஆண்டு ஐஐடியில் பட்ட மேற்படிப்பு முடித்தார். தொடர்ந்து, 1983 ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, வானியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய பங்குதாரராக இருந்துள்ளார். குறிப்பாக, மில்லி செகண்ட் பல்சர், காமா கதிர் வெடிப்பு, சூப்பர் நோவா மற்றும் பல்வேறு விண்வெளி பொருட்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு ஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu