அமெரிக்க எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

June 7, 2023

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,20,791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55,038 பேரும் , […]

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,20,791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55,038 பேரும் , கனடாவை சேர்ந்த 4,235 பேரும் எச்-1பி விசா பெற்றுள்ளனர். 2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்ற நிலையில், கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu