அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக 4 பேர் நுழைந்துள்ளனர். கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த சரக்கு ரயிலில் இருந்து அவர்கள் கீழே குதித்தனர். அவர்கள் குதிப்பதை பார்த்த அமெரிக்க எல்லை காவல் படையினர், உடனடியாக செயல்பட்டு அவர்களை கைது செய்தனர். அவர்கள் எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது விசாரணை மூலம் உறுதியானது. கைது செய்யப்பட்ட 4 பேரில், ஒரு பெண் உட்பட 3 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.