வெளிநாடுகளில் உள்ளோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இது குறித்து, உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் உள்ளோர் தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில் 2022ம் ஆண்டிலும் இந்தியர்களே முதலிடத்தை பிடித்துள்ளனர். நடப்பாண்டில் இந்தியர்கள் 100 பில்லியன் டாலர் அளவிற்கு அனுப்பியுள்ளனர். வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு பணத்தை பெற்றதில்லை.
இது நடப்பாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டை விடவும் அதிகமாகும். கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு திரும்புவோர் அதிகரித்ததை அடுத்து நடப்பாண்டில் அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.