லண்டனில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வு

May 6, 2023

லண்டனுக்கு, படகுகள் மூலமாக சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் நுழைவதாக அந்நாட்டின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், சிறிய படகுகள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப், குஜராத், தில்லி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக இந்தியர்கள் லண்டனுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைமை அலுவலகம் அளித்துள்ள தகவல்கள் படி, ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை, 3793 பேர் சிறிய படகுகள் […]

லண்டனுக்கு, படகுகள் மூலமாக சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் நுழைவதாக அந்நாட்டின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், சிறிய படகுகள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப், குஜராத், தில்லி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக இந்தியர்கள் லண்டனுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தலைமை அலுவலகம் அளித்துள்ள தகவல்கள் படி, ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை, 3793 பேர் சிறிய படகுகள் மூலம் லண்டனுக்குள் நுழைந்துள்ளனர். அதில், 909 ஆப்கானிஸ்தியர்களும், 675 இந்தியர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை முறையை 24% மற்றும் 18% ஆகும். குறிப்பாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் லண்டனுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் பெரும்பாலானோர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. லண்டனில் பணி விசா பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu