இந்திய ஜோடிகள் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது ஹாங்காஙில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் சுமித் ரெட்டி மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில், இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால், இந்திய ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது. அதோடு, பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த் மற்றும் ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.