30 வயதிற்கு உட்பட்டோருக்கான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள இளம் தொழில் முனைவோர்கள் 300 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சிறந்த தொழில் முனைவோர்கள் மற்றும் சமூகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய தலைமை அதிகாரிகள் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து, தேவானந்த் பரத்வாஜ், ஆர்த் சவுதி, ஓஷி குமாரி - (Inside FPV தோற்றுநர்கள்), ஜார்ஜ் பிரான்சிஸ் (consumer industries), குஷ் ஜெயின் (Orma AI இணை தோற்றுநர்), ஹர்ஷத் ஜெயின் மற்றும் அமிப் சாஹா - (One Play) , அக்சித் பன்சால் மற்றும் ராகவ் ஆரோரா (Static), கௌதம் மகேஸ்வரன் மற்றும் அருண் ஸ்ரேயாஸ் (Race Energy), அனிகேட் டாமலே (BlackStone), யேசு அகர்வால் (Transq), ஸ்ரீநிவாஸ் சர்க்கார், குஷாக்ரா மங்கிளிக், கபல் - (Duet தோற்றுநர்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.