தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 78-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் போதே, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். “ஆகஸ்ட் 15, ஆனந்த சுதந்திர நாளாக மட்டும் இல்லாமல், ஆனந்த இந்தியாவை உருவாக்கும் நாளாகும்” என்று அவர் கூறினார்.மேலும் சமூக வளர்ச்சி மற்றும் திராவிட மாடல் அரசு குறித்தும் பேசினார். 2026-க்குள் 75,000 அரசு பணியிடங்களை நிரப்பப்படும், 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படும். ஓய்வூதியங்கள் உயர்த்தப்படும், மேலும் இயற்கை பேரிடர் தடுப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.