இந்தியாவின் சாதனைகள் விண்வெளியில் தொடரும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

November 15, 2022

இந்தியாவின் சாதனைகள் விண்வெளியில் தொடரும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், விண்வெளித் துறையில் நாம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம். செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் நாம் முக்கிய இடத்தில் உள்ளோம். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன. விண்வெளியில் ஏராளமான செயற்கைகோள்கள் செலுத்தப்படவுள்ளன. ஒன்று செயல்படவில்லையென்றால் அதற்கு பதில் வேறொன்று செலுத்த நாம் […]

இந்தியாவின் சாதனைகள் விண்வெளியில் தொடரும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விண்வெளித் துறையில் நாம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம். செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் நாம் முக்கிய இடத்தில் உள்ளோம். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன.

விண்வெளியில் ஏராளமான செயற்கைகோள்கள் செலுத்தப்படவுள்ளன. ஒன்று செயல்படவில்லையென்றால் அதற்கு பதில் வேறொன்று செலுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மூலமே நாம் மீண்டோம். மேலும் இந்தியாவின் சாதனைகள் விண்வெளியில் மென்மேலும் தொடரும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu