கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் 14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹெச் எஸ் பி சி யின் பிளாஷ் இந்தியா குழு இந்தியாவின் வர்த்தக செயல்பாடு குறித்த குறியீட்டு எண் PMI ஐ வெளியிட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் 61.8 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 62.2 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வேகமான வளர்ச்சியை ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளது. அத்துடன், கடந்த 2021 ஆகஸ்டுக்கு பிறகு தொடர்ந்து 50 என்ற புள்ளி இலக்கத்தை தாண்டி PMI குறியீட்டு எண் பதிவாகி வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.