ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டுடென்ட் சேலஞ்ச் - இந்தியாவின் ஆஸ்மி ஜெயின் வெற்றி

May 31, 2023

ஆப்பிள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய முறையில் மாணவர்களுக்கான கோடிங் போட்டியை நடத்தி வருகிறது. ஸ்விஃப்ட் கோடிங்கை பயன்படுத்தி ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்பதே இந்த போட்டியாகும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில், 375 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், முதல் முறையாக இந்திய மாணவி ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்மி ஜெயின் என்ற இந்திய மாணவி, சுகாதாரத் துறை சார்ந்த செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது, கண் தசைகளை […]

ஆப்பிள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய முறையில் மாணவர்களுக்கான கோடிங் போட்டியை நடத்தி வருகிறது. ஸ்விஃப்ட் கோடிங்கை பயன்படுத்தி ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்பதே இந்த போட்டியாகும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில், 375 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், முதல் முறையாக இந்திய மாணவி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

ஆஸ்மி ஜெயின் என்ற இந்திய மாணவி, சுகாதாரத் துறை சார்ந்த செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது, கண் தசைகளை வலுவடைய செய்யும் முயற்சியில் உதவுவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆஸ்மி, “என் நண்பரின் மாமாவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவரது கண்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும், முகபக்கவாதம் நேர்ந்தது. அதன் காரணமாகவே, கண் தசைகளை வலுவடைய செய்யும் செயலியை உருவாக்க நினைத்தேன்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த செயலியில், முகத்தில் உள்ள அனைத்து தசைகளையும் வலுவடையச் செய்யும் அம்சங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu