கொரோனா பரவல் சமயத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தளத்திலிருந்து குடிமக்களின் தகவல்கள் கசிந்துள்ளன. கிட்டத்தட்ட 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் கசிவு சம்பவம் ஆகும்.அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான Resecurity, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆதார் தகவல் கசிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட 81.5 கோடி மக்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட உயர்வான எண்ணிக்கையாகும். ஆனால், Resecurity நிறுவனத்தின் அறிக்கைக்கு, ஐ சி எம் ஆர் அல்லது இந்திய அரசு சார்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. ஐ சி எம் ஆர் புகார் அளித்தவுடன், விசாரணையில் ஈடுபட சிபிஐ தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.