கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 107.84 மில்லியன் டன் அளவில் பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 12% உயர்வாகும். அதே வேளையில், உற்பத்தி முடிந்து, வெளியே அனுப்பப்படும் நிலக்கரியின் அளவு 83.18 மில்லியன் டன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7.49% உயர்வாகும். மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன
மேலும், அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 37 முன்னணி நிலக்கரி உற்பத்தி சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் 29 சுரங்கங்கள் 100% க்கும் அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்துள்ளன. மேலும், 6 சுரங்கங்கள், 80 முதல் 100% வரை உற்பத்தியை பதிவு செய்துள்ளன. நாட்டில், நிலக்கரி மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தின் அளவில் 5.7% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நிலக்கரி மின் உற்பத்தி 139718 மில்லியன் யூனிட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 9.13% உயர்வாகும்.