கடந்த 2022 ஆம் ஆண்டு, இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி 5.8% உயர்ந்து, 12.445 கோடி டன் ஆக பதிவாகியுள்ளது. பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மின்ட் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில்ம் இந்தியாவின் ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டை விட குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் பதிவாகியுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், கச்சா இரும்பிலிருந்து எடுக்கப்பட்ட உருக்கு உற்பத்தி 11 கோடி டன் அளவில் பதிவாகியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் 10.454 கோடி டன் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், உருக்கு பயன்பாடு 10.648 கோடி டன் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2021 ஆம் ஆண்டின் 9.839 கோடி டன்னை விட 8% அதிகமாகும். நாடு தழுவிய முறையில், உள்கட்டமைப்பு துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, உருக்கு பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.