உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மணிகா பத்ரா தோல்வியடைந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை கியான் டியான்யியுடன் மோதினார். இதில், கியான் டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதற்கிடையில், மற்றொரு இந்திய வீராங்கனை ஜா அகுலா முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துள்ளார்.














