இந்தியாவின் மருந்து தர விதிமுறைகள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் மசோதா 2023 தொடர்பான கலந்தாலோசனையை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட நிதி ஆயோக் தனது பரிந்துரையை முன்வைத்துள்ளது. தற்போதைய மசோதா, இந்தியாவின் மருந்து தரக் கட்டுபாடுகளை சர்வதேச தரத்திலானதாக மாற்றுவதாக இருக்க வேண்டும். இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாடு சர்வதேச தரத்தில் மாறும்போது, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி அதிகரிக்கும். மேலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் இந்திய மருந்துகளின் தரம் உறுதி செய்யப்படும். காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.